Song lyrics
Idhayam
இதயம்
20742 views
Singer · Srinivas, Chinmayi
Lyrics · Vairamuthu
The lyrics
தளபதி ரஜினி சிறையில். காதலிக்கும் இளவரசி அந்தப்புரத்தில் சங்க இலக்கிய மொழியில் காதல் பிரிவைப் பாடும் பாடல்
தீபிகா படுகோன் :
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் …
இதயம்
நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே
நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்த மலராய்…
இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே
*
ரஜினி :
பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
மறக்கிலேன்
*
ரஜினி :
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?
தீபிகா படுகோன் :
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் …
இதயம்
நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே
நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்த மலராய்…
இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே
*
ரஜினி :
பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
மறக்கிலேன்
*
ரஜினி :
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Senthee Vizluntha இதயம் செந்தீ விழுந்த
Sung by Chinmayi, Srinivas
-
Engae Pogudho எங்கே போகுதோ
Sung by S. P. Balasubramaniam
-
Medhuvaaga thaan மெதுவாகத்தான்
Sung by S. P. Balasubramaniam, Sadhana Sargam
-
Maattram Ondrudhaan மாற்றம் ஒன்றுதான்
Sung by Rajinikanth, Haricharan, Jathi by V. Umashankar
-
Idhayam இதயம்
Sung by Srinivas, Chinmayi
-
Engal Kochadaiiyaan எங்கள் கோச்சடையான்
Sung by Kochadaiiyaan Ensemble
-
Manappenin Sathiyam மணப்பெண்ணின் சத்தியம்
Sung by Latha Rajinikanth
-
Manamaganin Sathiyam மணமகனின் சத்தியம்
Sung by Haricharan
-
Karma Veeran கர்ம வீரனே
Sung by A. R. Rahman, A. R. Reihana