Manamaganin Sathiyam artwork

Song lyrics

Manamaganin Sathiyam

மணமகனின் சத்தியம்

99268 views

Singer · Haricharan

Lyrics · Vairamuthu

The lyrics

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்

செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்

கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்

மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
தாய் மடியாவேன்

சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்

உன் கனவுகள் நிஜமாக
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kochadaiyaan

Keep listening

More from this movie

  1. Senthee Vizluntha இதயம் செந்தீ விழுந்த

    Sung by Chinmayi, Srinivas

  2. Engae Pogudho எங்கே போகுதோ

    Sung by S. P. Balasubramaniam

  3. Medhuvaaga thaan மெதுவாகத்தான்

    Sung by S. P. Balasubramaniam, Sadhana Sargam

  4. Maattram Ondrudhaan மாற்றம் ஒன்றுதான்

    Sung by Rajinikanth, Haricharan, Jathi by V. Umashankar

  5. Idhayam இதயம்

    Sung by Srinivas, Chinmayi

  6. Engal Kochadaiiyaan எங்கள் கோச்சடையான்

    Sung by Kochadaiiyaan Ensemble

  7. Manappenin Sathiyam மணப்பெண்ணின் சத்தியம்

    Sung by Latha Rajinikanth

  8. Manamaganin Sathiyam மணமகனின் சத்தியம்

    Sung by Haricharan

  9. Karma Veeran கர்ம வீரனே

    Sung by A. R. Rahman, A. R. Reihana