Song lyrics
Kanne Unthan Kannil
கண்ணே உந்தன் கண்ணில்
3470 views
Singer · Mano
Lyrics · Vairamuthu
The lyrics
கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன்

கன்னம் தொடும்போது கண்ணில் கங்கை பார்க்கிறேன்
உன்னை எண்ணித்தானே இந்த மண்ணில் வாழ்கிறேன்

கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது அதன்
மலரோடு வாழ்வேன் இது போதுமானது

கப்பல் ஒன்றை மூழ்க விட்டு கட்டுமரம் கண்டெடுத்தேன்
கட்டுமரம் போதுமம்மா கரை சேர்ப்பேன்
முத்துச்சரம் முத்தம் தரும் கடன் வாங்கிக் கொள்கிறேன்
பிஞ்சு விரல் என்னைத் தொடும் அதில் தூங்கி கொள்கிறேன்

உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது
புரியாத சொந்தம் இது புனிதமானது
உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது
புரியாத சொந்தம் இது புனிதமானது
பிள்ளை என்னும் புத்தகத்தில்
வாழ்வை இன்று கற்றுக் கொண்டேன்
துன்பத்திலும் இன்பம் உண்டு துணிந்து விட்டேன்
அந்த கண்கள் கண்டுக் கொண்டே எந்தன் காலம் போகட்டும்
அந்தக் கையைத் தொட்டுக் கொண்டே எந்தன் ஜீவன் போகட்டும்
அங்கிள் உந்தன் கண்ணில் நான் என்னை பார்க்கிறேன்
அள்ளிக் கொள்ளும்போது நான் அன்னை பார்க்கிறேன்

உன்னை நம்பித்தானே இந்த மண்ணில் வாழ்கிறேன்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kanne Unthan Kannil கண்ணே உந்தன் கண்ணில்
Sung by Mano
-
Thandai Aninthavale ஓஓஒஹ்ஓஹோ ஆஆஆஹ்ஹஆஹா
Sung by Mano, Vanitha
-
Thudikkindrathe Indha Roja துடிக்கின்றதே இந்த ரோஜா
Sung by Lalitha Sagari
-
Punnagai Puriyatha புன்னகை புரியாதா புன்னகை
Sung by K. J. Jesudass, S. P. Sailaja
-
Meesa Thudikkuthamma Mel Moochu கான மயிலே உன்னை
Sung by Malasiya Vasudevan, S. P. Sailaja