Song lyrics
Thedum Kan Paarvai
தேடும் கண் பார்வை
64077 views
Singer · S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics · Vaali
The lyrics
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா
பனிவாய் மலரே உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம் அல்லவா
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம் இணைவோம்
இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ
தேடும் கண் பார்வை தவிக்க
துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா
பனிவாய் மலரே உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம் அல்லவா
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம் இணைவோம்
இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ
தேடும் கண் பார்வை தவிக்க
துடிக்க
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kuzhaloodum Kannanukku குழலூதும் கண்ணனுக்கு
Sung by K. S. Chithra
-
Vaa Vennila வா வெண்ணிலா
Sung by S. Janaki, S. P. Balasubramaniam
-
Thedum Kan Paarvai தேடும் கண் பார்வை
Sung by S. Janaki, S. P. Balasubramaniam
-
Ooru Sanam ஊரு சனம் தூங்கிருச்சு
Sung by S. Janaki
-
Dil Dil Dil Manadhil தில் தில் மனதில்
Sung by P. Susheela, S. P. Balasubramaniam
-
Sakkara Kattikku சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
Sung by K. S. Chithra, S. P. Sailaja, B. S. Sasirekha