Vaada En Chellakkutty

Song lyrics

Vaada En Chellakkutty

வாடா என் செல்லக்குட்டி

0 views

Singer · Keshav Vinod

Lyrics · Palani Bharathi

The lyrics

வாடா என் செல்லக்குட்டி
வாடாத ரோஜாக்குட்டி
என் வாழ்வின் மீதமிங்கு நீதானம்மா

தாய்ப்போல மரங்கள் உண்டு
தாலாட்டக் காற்றுமுண்டு
தந்தை என் தோள்களிலே
பொன் ஊஞ்சல் ஆடம்மா

எங்கேயும் வானமுண்டு
எல்லோர்க்கும் வாழ்க்கையுண்டு
மேகங்கள் போகும் வழி
நாமும் போகலாம்

செவ்வானம் சிரிக்கின்றதே
சித்திரங்கள் அழைக்கின்றதே
செல்லங்கள் கொஞ்சி கொஞ்சி கைவீசுதே

மகளல்ல நீ எந்தன் தாயானவள்
மனவானிலே நீந்தும் ஒளியானவள்
கண்ணீரிலும் கொஞ்சம் சிரிக்கின்றவள்
சிரிப்பொன்றிலே நெஞ்சைப் பறிக்கின்றவள்
நதிமீதிலே வீழ்ந்த இலை போலவே
வருகின்றதே நெஞ்சம் உன்னோடு தன்னாலே

வாடா என் செல்லக்குட்டி
வாடாத ரோஜாக்குட்டி
என் வாழ்வின் மீதமிங்கு நீதானம்மா

மேகங்களின் பாதை யார் போட்டது
முள் மீதிலும் பூக்கள் ஏன் பூத்தது
வாழ்வென்பது தேடச் சொல்கின்றது
வாசல்களைக் காலம் திறக்கின்றது
அன்பொன்றுதான் வாழ்வின் ஆதாரமே
நீதானம்மா எந்தன் சந்தோஷம் எந்நாளும்

செவ்வானம் சிரிக்கின்றதே
சித்திரங்கள் அழைக்கின்றதே
செல்லங்கள் கொஞ்சி கொஞ்சி கைவீசுதே

போகின்ற பாதையெல்லாம் பூப் பூக்கும் நேரமிது
தேனோடு தாய்ப்பாலின் ஈரங்கள் ஊறுதே
தேயாத வெண் நிலவு தாலாட்டும் ஓர் கனவு
கண்ணே உன் பூவிழியில் நெஞ்சம் உருகுதே

வாடா என் செல்லக்குட்டி
வாடாத ரோஜாக்குட்டி
என் வாழ்வின் மீதமிங்கு நீதானம்மா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thaainilam

Keep listening

More from this movie

  1. Vaada En Chellakkutty வாடா என் செல்லக்குட்டி

    Sung by Keshav Vinod

  2. Thalaivaari Poochoody தலைவாரிப் பூச்சூடி

    Sung by Ouseppachan

  3. Naanku Thisayilum நான்கு திசையிலும்

    Sung by Ouseppachan

  4. Vaanile Megangal வானிலே மேகங்கள்

    Sung by Ouseppachan

  5. Aagaayam Mele ஆகாயம் மேலே

    Sung by Varsha Ranjith