Aagaayam Mele

Song lyrics

Aagaayam Mele

ஆகாயம் மேலே

0 views

Singer · Varsha Ranjith

Lyrics · Thamarai

The lyrics

விடியாமல் போன காலை
விதியின் கையால் வந்த ஓலை
அருகிருந்தும் நான் தூரம் போனேன்
இனி என் செய்வேன் இனி என் செய்வேன்

ஆகாயம் மேலே அப்பா நீ கீழே
மீளா உறக்கம் கொள்கின்றாய் காற்றில் நீ கண் மூடி
மேகங்கள் மேலே மேய்ப்பன் நீ கீழே
தீரா கனவை காண்கின்றாய் தேரில் நீ ஏறி

இரவில் பேசிய படியே சாய்ந்திடும் மடியே தலையணை எனக்கு
தூங்கும் தலையை கோதிடும் விரல்கள் தாய்மையின் நிழல்கள் மயிலிறகு எதற்கு
இங்கேயே நிற்கத் தோன்றும் இன மானம் தோற்றுப்போகும் உன் வார்த்தை
காதில் வந்து கை வைத்து உந்திச்செல்லும்
உன் ஆசை நிராசை ஆகாமல் காப்பேன்

ஆகாயம் மேலே அப்பா நீ கீழே
மீளா உறக்கம் கொள்கின்றாய் காற்றில் நீ கண் மூடி

விழியை காத்திடும் இமைபோல் நீ இருந்ததனால் கனவினில் மிதந்தேன்
கொள்ளும் வெயிலில் மாய்ந்திடும் பனிபோல் நீ மறைந்ததனால் நெருப்பினில் விழுந்தேன்
நாம் தோற்கக் கூடாதென்று நீ சொன்ன சொல்லே இங்கு முன்போகத் தள்ளுதென்னை
நாம் வாழ்ந்த மண்ணே அன்னை நான் ஏந்திச் செல்கின்றேன் நெஞ்சோடு உன்னை

ஆகாயம் மேலே அப்பா நீ கீழே
மீளா உறக்கம் கொள்கின்றாய் காற்றில் நீ கண் மூடி
மேகங்கள் மேலே மேய்ப்பன் நீ கீழே
தீரா கனவை காண்கின்றாய் தேரில் நீ ஏறி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thaainilam

Keep listening

More from this movie

  1. Vaada En Chellakkutty வாடா என் செல்லக்குட்டி

    Sung by Keshav Vinod

  2. Thalaivaari Poochoody தலைவாரிப் பூச்சூடி

    Sung by Ouseppachan

  3. Naanku Thisayilum நான்கு திசையிலும்

    Sung by Ouseppachan

  4. Vaanile Megangal வானிலே மேகங்கள்

    Sung by Ouseppachan

  5. Aagaayam Mele ஆகாயம் மேலே

    Sung by Varsha Ranjith