Thaneer vittom

Song lyrics

Thaneer vittom

தண்ணீர் விட்டோம்

11271 views

Singer · Tiruchi Loganathan

Lyrics · Bharathiar

The lyrics

தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ
கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ

தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்

எண்ணமெல்லாம் மெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடிய திருவுளமோ
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியை தோற்போமோ
மாதரையும் மக்களையும் வந்கன்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி
இரு கண்ணற்ற சேய்போல் கலங்குவதும் காண்கிலையோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kappalottiya Thamizhan

Keep listening

More from this movie

  1. Velli Panimalayin வெள்ளி பனிமலையின்

    Sung by Thiruchi Loganathan, Seerkazhi Govindarajan

  2. Chinna Kuzhandaigal சின்ன குழந்தைகள்

    Sung by P. Susheela

  3. Thaneer vittom தண்ணீர் விட்டோம்

    Sung by Tiruchi Loganathan

  4. Odi vilayadu ஓடி விளையாடு

    Sung by Seerkazhi Govindarajan, Gajalakshmi, Meera

  5. Nenjil uramindri நெஞ்சில் உரம் இன்றி

    Sung by Seerkazhi Govindarajan

  6. Paarukkulae nalla nadu பாருக்குள்ளே நல்ல நாடு

    Sung by Seerkazhi Govindarajan

  7. Endru thaniyum என்று தணியும் இந்த

    Sung by Thiruchi Loganathan

  8. Kaatru Veliyidal காற்று வெளியிடை

    Sung by P. B. Srinivas, P. Susheela