Unnodu Naan Irundha artwork

Song lyrics

Unnodu Naan Irundha

உன்னோடு நான் இருந்த

95404 views

Singer · Arvind Swamy

Lyrics · Vairamuthu

The lyrics

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைதபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருகோலம் கனவாக மறைந்தால்
கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Iruvar

Keep listening

More from this movie

  1. Ayirathil Naan Oruvan ஆயிரத்தில் நான் ஒருவன்

    Sung by Mano

  2. Narumugayae Narumugayae நறுமுகையே நறுமுகையே

    Sung by P. Unnikrishnan, Bonnie Chakraborthy

  3. Pookodiyil Punnagai பூ கொடியின் புன்னகை

    Sung by Sandhiya

  4. Vennila Vennila வெண்ணிலா வெண்ணிலா

    Sung by Asha Bhosle

  5. Hello Mister ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி

    Sung by Rajagopal, Harini

  6. Kannai Katti கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

    Sung by Hariharan

  7. Udal Mannuku உடல் மண்ணுக்கு உயிர்

    Sung by Arvind Swamy

  8. Unnodu Naan Irundha உன்னோடு நான் இருந்த

    Sung by Arvind Swamy