Kadhalikkum Pennin kaikal artwork

Song lyrics

Kadhalikkum Pennin kaikal

காதலிக்கும் பெண்ணின் கைகள்

124711 views

Singer · S. P. Balasubramaniam, Udit Narayan

Lyrics · Vairamuthu

The lyrics

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே

காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே

காதலுக்கு அன்னபட்சி தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே

காதல் ஜோடி புகைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

இதில் அர்ப்பமானது எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை

வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இல்லை என்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இல்லை என்று
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kadhalan

Keep listening

More from this movie

  1. Kadhalikkum Pennin kaikal காதலிக்கும் பெண்ணின் கைகள்

    Sung by S. P. Balasubramaniam, Udit Narayan

  2. Ennavale Adi Ennavale என்னவளே அடி என்னவளே

    Sung by P. Unnikrishnan

  3. Gopala Gopala கோழி குஞ்சு தேடி

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  4. Urvasi Urvasi ஊர்வசி ஊர்வசி

    Sung by A. R. Rahman, Suresh Peters, Shahul Hameed

  5. Pettai Rap பேட்ட ராப்

    Sung by Suresh Peters, Theni Kunjarammal, Shahul Hameed

  6. Mukkabla Mukkabla முக்காலா முக்காபுலா

    Sung by Mano, Swarnalatha

  7. Indiraiyo Ival Sundariyo இந்திரையோ

    Sung by Sunandha, Kalyani Menon, Minmini

  8. Kaatru Kuthirayile காற்று குதிரையிலே

    Sung by Sujatha