Solla Solla

Song lyrics

Solla Solla

சொல்லச் சொல்ல இனிக்குதடா

33098 views

Singer · P. Susheela

Lyrics · Kannadasan

The lyrics

தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து
தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா...
மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த
என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா...


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா 

பிள்ளை பிராயத்திலே 
பெரிய பெயர் பெற்றவனே
பிள்ளை பிராயத்திலே 
பெரிய பெயர் பெற்றவனே
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா


முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்
முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்
உயிரினங்கள் ஒன்றை ஒன்று 
வாழ்த்திடும் போது
உயிரினங்கள் ஒன்றை ஒன்று 
வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ
முருகா...

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...


உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்
உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகள் எல்லாம் 
உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறி 
சந்திக்கும் போது 
யுகங்கள் எல்லாம் மாறி மாறி 
சந்திக்கும் போது 
உன் முகமலரின் அழகு மட்டும் 
முதுமை வராது 
கந்தா முதுமை வராது 
குமரா...

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...
← Back to Kandan Karunai

Keep listening

More from this movie

  1. Aarumuga Porul ஆறு முகமான பொருள்

    Sung by S. Janaki, Rajalakshmi

  2. Aarupadai Veedu Konda அறுபடை வீடு கொண்ட

    Sung by Seerkazhi Govindarajan

  3. Ariyathu அரிது அரிது மானிடராதல்

    Sung by K. B. Sundarambal

  4. Muthu Thamizh கந்தனுக்கு ஞானவேல்

    Sung by A. L. Raghavan, K. B. Sundarambal, Jamuna Rani, A. P. Komala

  5. Konjum Kili கொஞ்சும் கிளி குருவி

    Sung by A. L. Raghavan

  6. Kurinjiyile குறிஞ்சியிலே பூ மலர்ந்து

    Sung by P. Susheela

  7. Manam Padaithen மனம் படைத்தேன்

    Sung by P. Susheela

  8. Murugani Senthil முருகனே செந்தில்

    Sung by Seerkazhi Govindarajan

  9. Muruga Muruga முருகா முருகா

    Sung by K. B. Sundarambal

  10. Solla Solla சொல்லச் சொல்ல இனிக்குதடா

    Sung by P. Susheela

  11. Thirupparang Kundrathil திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்

    Sung by Rajalakshmi, P. Susheela

  12. Velli Malai வெள்ளி மலை

    Sung by S.Varalakshmi

  13. Velli Malai Podhighai வெள்ளி மலை பொதிகை

    Sung by T. M. Soundararajan

  14. Vetrivel Veeravel வெற்றி வேல் வீர வேல்

    Sung by T. M. Soundararajan