Thagida Thathimi

Song lyrics

Thagida Thathimi

தகிட ததிமி

335 views

Singer · S. P. Balasubrahmanyam

Lyrics · Vairamuthu

The lyrics

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும் நீ தொடங்கும் போது முடியும்
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும் நீ தொடங்கும் போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது... தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
என் கதை எழுதிட மறுக்குது... ஆ... ஆ... ஆ...

பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுத்து
பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுத்து
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Salangai Oli

Keep listening

More from this movie

  1. Om Namachivaaya ஓம் நம சிவாய

    Sung by S. Janaki

  2. Mounamana Neram மௌனமான நேரம்

    Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki

  3. Naadha Vinodhangal நாத வினோதங்கள்

    Sung by S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

  4. Vaan Pole Vannam வான் போலே வண்ணம்

    Sung by S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

  5. Thagida Thathimi தகிட ததிமி

    Sung by S. P. Balasubrahmanyam

  6. Vedham Anuvilum வேதம் அணுவிலும்

    Sung by S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

  7. Balakanagamaya பாலகனகமையா

    Sung by S. Janaki