Vaan Pole Vannam

Song lyrics

Vaan Pole Vannam

வான் போலே வண்ணம்

215 views

Singer · S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

Lyrics · Vairamuthu

The lyrics

பெண் : வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

அஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
பல விந்தைகள் செய்தவனே

ஆண் : அஹா.. ஹஹஹா..
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக் கொண்டு திரிந்தாயே
மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக் கொண்டு திரிந்தாயே

பெண் : அன்னையின்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே
மோகனங்கள் பாடி வந்து
மோகவலை விரித்தாயே

ஆண் : ஆஆ....
பெண் : மோகனங்கள் பாடி வந்து
மோகவலை விரித்தாயே

ஆண் : சேலைகளைத் திருடி அன்று
செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள்
போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

பெண் : வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

பெண் : பெண்கள் உடை எடுத்தவனே
தங்கைக் குடை கொடுத்தவனே
பெண்கள் உடை எடுத்தவனே
தங்கைக் குடை கொடுத்தவனே

ஆண் : ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே
கீதையென்னும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே

பெண் : ஆஆ....
ஆண் : கீதையென்னும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே

பெண் : கவிகள் உனை வடிக்க
காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உந்தன் கானமெல்லாம்
இன்றும் என்றும் வாழும் கண்ணா
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

ஆண் : வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

பெண் : அஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே

ஆண் : ம்...
பெண் : பல விந்தைகள் செய்தவனே

ஆண் : அஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே

பெண் : ம்...
ஆண் : பல விந்தைகள் செய்தவனே

பெண் : அஹா.. ஹஹஹா..
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Salangai Oli

Keep listening

More from this movie

  1. Om Namachivaaya ஓம் நம சிவாய

    Sung by S. Janaki

  2. Mounamana Neram மௌனமான நேரம்

    Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki

  3. Naadha Vinodhangal நாத வினோதங்கள்

    Sung by S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

  4. Vaan Pole Vannam வான் போலே வண்ணம்

    Sung by S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

  5. Thagida Thathimi தகிட ததிமி

    Sung by S. P. Balasubrahmanyam

  6. Vedham Anuvilum வேதம் அணுவிலும்

    Sung by S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

  7. Balakanagamaya பாலகனகமையா

    Sung by S. Janaki