Song lyrics
Niram Pirithu
நிறம் பிரித்து பார்த்தேன்
3404 views
Singer · Sujatha Mohan
Lyrics · Palani Barathi
The lyrics
நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணமென்ன
சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணமென்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ..ஓ.
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ..ஓ.(நிறம்)
எந்த மேகம் எந்த ஊரில் இன்று சென்று பொழியும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
எந்த கல்லில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்....
காலமே படைத்தது காலமே மறைத்தது
நாளைகள் என்பது நாளைதான் உள்ளது
காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும்
அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும்..ம்ம்...(நிறம்)
ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும்
எல்லாமே எல்லாமே நம் கையிலே
வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும்
எல்லாமே எல்லாமே யார் கையிலே
வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம்
காலமும் காதலும் தோழமை ஆகலாம்
முத்துச்சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை
மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே அலைக்கடல் ஓசை (நிறம்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Thavikkiren Thavikkiren தவிக்கிறேன் தவிக்கிறேன்
Sung by Bhavatharani, Hariharan
-
Kadhal Neethana காதல் நீ தானா
Sung by P. Unnikrishnan, Sujatha
-
Naan Thanga Roja நான் தங்க ரோஜா
Sung by S. P. Balasubramaniam, Swarnalatha
-
Niram Pirithu நிறம் பிரித்து பார்த்தேன்
Sung by Sujatha Mohan
-
Muthu Nilave முத்து நிலவே தித்திக்கின்றதே
Sung by Gopika Poornima, Devan