Vaanum mannum katti artwork

Song lyrics

Vaanum mannum katti

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே

33115 views

Singer · Hariharan, K. S. Chithra

Lyrics · Vairamuthu

The lyrics

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை
ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaadhal Mannan

Keep listening

More from this movie

  1. Vaanum mannum katti வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே

    Sung by Hariharan, K. S. Chithra

  2. Unnai Paartha Pinpu உன்னைப் பார்த்த பின்பு நான்

    Sung by S. P. Balasubramaniam

  3. Thilothama Thilothama திலோத்தமா திலோத்தமா

    Sung by Bharathwaj, Annupamaa

  4. Mettu Thedi மெட்டு தேடி

    Sung by M. S. Viswanathan

  5. Marimuthu Marimuthu மாரிமுத்து மாரிமுத்து

    Sung by Deva

  6. Kanni Pengal கண்ணிப்பெண்கள்

    Sung by Febi, Ada Ali Azad