Oru Poongavanam

Song lyrics

Oru Poongavanam

ஒரு பூங்காவனம் புதுமணம்

25082 views

Singer · S. Janaki

Lyrics · Vaali

The lyrics

ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Agni Natchathiram

Keep listening

More from this movie

  1. Oru Poongavanam ஒரு பூங்காவனம் புதுமணம்

    Sung by S. Janaki

  2. Raaja Raajathi ராஜா ராஜாதி

    Sung by Ilaiyaraaja

  3. Thoongatha Vizhigal தூங்காத விழிகள்

    Sung by K. J. Yesudas, S. Janaki

  4. Roja Poo Adivanthathu ரோஜப்பூ ஆடிவந்தது

    Sung by S. Janaki

  5. Vaa Vaa Anbe Anbe வா வா அன்பே அன்பே

    Sung by Chithra, K. J. Yesudas

  6. Ninukori Varnam நின்னுக்கோரி வர்ணம்

    Sung by K. S. Chithra