Eppo Varuvaro artwork

Song lyrics

Eppo Varuvaro

எப்போ வருவாரோ

2618 views

Singer · P. Susheela

Lyrics · V. Seetharaman

The lyrics

எப்போ வருவாரோ அவர் எப்போ வருவாரோ
எந்தன் மன மோகனன் எந்தன் மன மோகனன்
செப்பியபடியே தரிசனம் தர எப்போ வருவாரோ.....
காதலி என் மனம் வேதனை மீறுதே
பாதகம் நேர்ந்ததோ மாதவன் அவர் இங்கு (எப்போ)

கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்
கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்
கண்ணன் என் மணிவண்ணன்
அமுதமழை பொழியும் அரவிந்த முகந்தனைக் (கண்டேன்)

வெள்ளை உள்ளம் படைத்த கோபாலன் தன்னை
கொள்ள நினைக்கும் கம்ச பூபாலன்
மெல்லத் தொடர்ந்து வரும் சிசுபாலன் தன்னை
உள்ளமும் எண்ணி எண்ணிக் கலங்குதடி

மாயரூபா மணிவண்ணா – உன்னை
மடக்கவராரு ஒரு அண்ணா
பாயும் புலி எனவே
தாவி வராரு பாரு உஷாரு....

இதயம் கவர்ந்த உன்னை இழந்தால் – உலகம்
இருண்டு போகுமே நந்தலாலா
என்னுடன் நீ இருக்கும்போது எங்கும்
இன்ப ஒளி வீசும் நந்தலாலா

யார்க்கும் அகப்படாத கள்வன் – என்
அந்தரங்கம் புகுந்த செல்வன்
காக்கப் பிறந்தவனும் அவனே – நான்
காத்திட நினைப்பதும் அவனே......

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Athisaya Penn

Keep listening

More from this movie

  1. Angum Ingum அங்கும் இங்கும்

    Sung by T. M. Soundararajan

  2. Kalangatha Ullamum கலங்காத உள்ளமும்

    Sung by P. Susheela

  3. Eppo Varuvaro எப்போ வருவாரோ

    Sung by P. Susheela

  4. Eena Meena Deeka (Male) ஈனா மீனா டீகா (ஆண்)

    Sung by T. M. Soundararajan

  5. Eena Meena Deeka (Female) ஈனா மீனா டீகா (பெண்)

    Sung by P. Susheela

  6. Unnai Ninaichale உன்னை நினைச்சாலே

    Sung by P. Susheela

  7. Unthan Jaalam உந்தன் ஜாலம் செல்லாது

    Sung by P. Susheela

  8. Sila Per Vazha சில பேர் வாழ

    Sung by T. M. Soundararajan

  9. Anipillai Tennampillai அணிப்பிள்ளை தென்னம்

    Sung by Seerkazhi Govindarajan

  10. Makara Veenai மகர வீணை

    Sung by A. P. Komala