Lolita artwork

Song lyrics

Lolita

பொன்மஞ்சள் மஞ்சள்

54806 views

Singer · Karthik, Prashanthini

Lyrics · Thamarai

The lyrics

லோலிட்டா ஹா லோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்றுக் கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிட்டா ஹா லோலிட்டா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டித் தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்றுக் கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிட்டா ஹா லோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

கொட்டும் போதே மழை
கொட்டால் விட்டால் பிழை
வாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி
பற்றிக் கொள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய்ச் சொல்கிறாய்

நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாய அதில்கூட பல வெண்ணிலா

மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்துசென்றுக் கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிடா ஹா லோலிடா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

தானாய் வந்தால் ருசி
தள்ளிச் சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி
கட்டி கொண்டால் நெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா

நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் துரும்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் கரும்பில்லையே

ஓ லோலிட்டா ஹா லோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Engeyum Kaadhal

Keep listening

More from this movie

  1. Theeyillai Pukai Illai தீயில்லை புகையில்லை

    Sung by Naresh Iyer, Mukesh, Gopal Rao, Mahathi, Ranina Reddy

  2. Enkeyum Kadhal எங்கேயும் காதல் விழிகளில்

    Sung by Aalap Raju, Devan

  3. Nenjil Nenjil Itho Itho நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

    Sung by Chinmayi, Harish Raghavendra

  4. Valliye Sakaravalliye வள்ளியே சக்கர வள்ளியே

    Sung by Richard, Rahul Nambiar, Naveen Madava

  5. Thimu thimu திம்மு திம்மு திம் திம் தினம்

    Sung by Karthik, Na. Muthukumar

  6. Lolita பொன்மஞ்சள் மஞ்சள்

    Sung by Karthik, Prashanthini