Aagayam Engengum artwork

Song lyrics

Aagayam Engengum

ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது

2116 views

Singer · Mano, P. Suseela

Lyrics · Pulamai Pithan

The lyrics

ஆண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்

பெண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்

ஆண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது

ஆண் : ஒட்டிக்கொண்டொரு ரெட்டை மாங்கனி
தொட்டில் ஆடுதடி
ஒத்துக் கொள் எனைக் கட்டிக்கொள் என
கட்டில் தேடுதடி

பெண் : பட்டுப் போல் உடல் தொட்டுப் பாத்ததும்
வெட்கம் வந்ததுவே
எட்டிப் போகையில் ஒட்டிக்கொள் என
உள்ளம் சொன்னதுவே

ஆண் : விழிகளில் நவரசம் இதழ்களில் மதுரசம்
பெண் : மனதினில் பரவசம் தினம் தினம் இலவசம்
ஆண் : வானம் பூமி சேரும் நேரம் நாம் சேரலாம்

பெண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆண் : ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
பெண் : என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
ஆண் : வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்

பெண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது

பெண் : மெத்தைக்கும் சுக வித்தைக்கும்
ஒரு தத்தை ஏங்கியதே
விண்ணுக்குள் வரும் சொர்க்கத்தை இது
மண்ணில் தேடியதே

ஆண் : ஆஹா தித்திக்கும் ஒரு முத்தத்தில்
மனம் தேனில் ஊறியதே
முத்தத்தில் வரும் சத்தத்தில்
ஒரு மோகம் ஏறியதே

பெண் : விரல்களும் விரல்களும்
இணைவதில் ஒரு சுகம்
ஆண் : விழிகளும் விழிகளும்
கலப்பதில் ஒரு சுகம்
பெண் : காதல் தீபம் கண்கள்
ரெண்டில் நீ கொண்டு வா

ஆண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
பெண் : ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
ஆண் : என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
பெண் : வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்
இருவரும் : லாலாலலலாலா.....லாலலாலா...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thaaya Thaarama

Keep listening

More from this movie

  1. Adi Aathi Pudhu அடி ஆத்தி புது பூவோட வாசம்

    Sung by Vani Jayaram, Manorama

  2. Aagayam Engengum ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது

    Sung by Mano, P. Suseela

  3. Thaaya Thaarama Kelvi தாயா தாரமா கேள்வி ஆகுமா

    Sung by SP. Balasubramaniam

  4. Vachukkodi Vachukkodi வச்சுக்கோடி வச்சுக்கோடி

    Sung by Malasiya Vasudevan, S. P. Shailaja

  5. Adippen Pattathaan Athukku அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான்

    Sung by Mano, Malasiya Vasudevan