Vetri Kodi Naatuven artwork

Song lyrics

Vetri Kodi Naatuven

கொடி நாட்டுவேன்

2490 views

Singer · P. Leela

Lyrics · Kannadasan

The lyrics

கொடி நாட்டுவேன் வெற்றிக்
கொடி நாட்டுவேன்
காதல் சோகம் வீரம் நடிப்பேன்
அழகாய் நான் மேடையிலே.....(கொடி)

சுற்றி வந்து ஜனங்களெல்லாம்
எட்டி எட்டி பார்க்கணும்
சொல்லப்போனால் ரசிகரெல்லாம்
ஆட்டோகிராப் கேக்கணும்
பத்திரிக்கை எடிட்டரெல்லாம் வாசலிலே காக்கணும் (கொடி)

ஸ்டாரைப் போல நானும் வந்தால்
ஊரில் யாரும் மலைக்கணும்
டான்ஸிங் போஸில் என்னைக்கண்டு
தன்னால் வந்து மயங்கணும்
சந்தோஷமாய் ஜனங்களெல்லாம்
ஜாலியாக ரசிக்கணும்....காதல் வேணுமா........

ஆருயிரே பிரேமை அமுதவாரியில்
நாமும் கலந்து மகிழ்வோம் – ஸ்வாமி
காதல் பொய்கையில் மூழ்கி
சுகமடைந்தே மகிழ்வோம்.....சோகம் வேணுமா.....

இன்பத்தின் எல்லை இதுதானா
என் வாழ்விலே இறுதியிதுதானா ஹா..இதுதானா
அன்பின் முடிவு இதுதானா நானினியும்
ஆனந்தம் பெறுவேனோ நான் மகிழ்வேனோ....

வீரம் வேணுமா......
சண்டாள மூர்க்கன் தறுதலை மடையன்
தடித்தன முள்ளதோர் கொடியன்...
தில்லானா வேணுமா......
தீம் நாத்ருதீம் தீம்தனன
தகரதானி உதரதோம் தீம் தனன....

ஊரைச் சுற்றி கம்மிங் நோட்டீஸ்
பேரு போட்டு பறக்கணும்
ஒய்யாரமாய் ஸ்டேஜில் வந்தால்
உடனே கிளாப்ஸ் கொடுக்கணும்
உள்ளே போகும்போது எல்லாம்
ஒன்ஸ்மோர் என்னைக் கேட்கணும்.....(கொடி)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kathanayaki (1955)

Keep listening

More from this movie

  1. Vetri Kodi Naatuven கொடி நாட்டுவேன்

    Sung by P. Leela

  2. Adhirshtam Adhu அதிர்ஷ்டம் அது

    Sung by P. Leela

  3. Ammammaa Aagaadhu அம்மம்மா ஆகாது

    Sung by K. Rani, S. C. Krishnan

  4. Pasi Pasi pasi Parama பசி பசி பரம ஏழைகளின்

    Sung by K. Rani, S. C. Krishnan

  5. Idli Saambaar இட்லி சாம்பார்

    Sung by S. C. Krishnan

  6. Adho Varukiraan அதோ வருகிறான்

    Sung by S. C. Krishnan

  7. Maalai Onru Kaiyil மாலை ஒன்று கையில்

  8. Perum Panathile Pirandhu பெரும் பணத்திலே பிறந்து

    Sung by P. Leela, Swarnalatha

  9. Duraiye Ilamai Paaraai துரையே இளமை பாராய்

    Sung by A. M. Rajah, K. Jamuna Rani

  10. Karpanai Kanavinile Naan Oru கற்பனைக் கனவிலே நானொரு

    Sung by A. M. Rajah, Swarnalatha

  11. Alolam Alolam ஆலோலம் ஆலோலம்

    Sung by S. C. Krishnan, Swarnalatha