Buddhan yesu artwork

Song lyrics

Buddhan yesu

புத்தன் இயேசு காந்தி

12242 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Chandhrodhayam

Keep listening

More from this movie

  1. Buddhan yesu புத்தன் இயேசு காந்தி

    Sung by T. M. Soundararajan

  2. Chandrodayam oru சந்திரோதயம் ஒரு

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Kaasikku pogum காசிக்கு போகும்

    Sung by Seerkazhi Govindarajan, T. M. Soundararajan

  4. Kettimelam கெட்டி மேளம்

    Sung by P. Susheela

  5. Pudhiyadhor ulagam seivom புதியதோர் உலகம்

    Sung by Seerkazhi Govindarajan

  6. Engiruntho Aasaikal எங்கிருந்தோ ஆசைகள்

    Sung by P. Susheela, T. M. Soundararajan