Kadavul Irukkindran artwork

Song lyrics

Kadavul Irukkindran

கடவுள் இருக்கின்றான்

13832 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?
கண்ணுக்கு தெரிக்கின்றதா ?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம் வருகின்றதா?
உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா
வெளியே தெரிகின்றதா ?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா
உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா?
சஞ்சலம் வருகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது
நீதி சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!
காக்கவும் தயங்காது!
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Anandha Jodhi

Keep listening

More from this movie

  1. Kadavul Irukkindran கடவுள் இருக்கின்றான்

    Sung by T. M. Soundararajan

  2. Kaala Magal கால மகள் கண் திறப்பாள்

    Sung by P. Susheela

  3. Ninaikka Therindha நினைக்கத் தெரிந்த மனமே

    Sung by P. Susheela

  4. Oru Thaai Makkal ஒரு தாய் மக்கள்

    Sung by T. M. Soundararajan

  5. Pala Pala பல ரகமா இருக்குது

    Sung by T. M. Soundararajan

  6. Paniyillatha Margazhiya பனி இல்லாத மார்கழியா

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  7. Poiyiley Piranthu பொய்யிலே பிறந்து

    Sung by P. Susheela, T. M. Soundararajan