Maaya Kanavo artwork

Song lyrics

Maaya Kanavo

மாயக் கனவோ

411 views

Singer · Chinmayi Sripada, Kapil Kapilan

Lyrics · Mohan Rajan

The lyrics

(ஆண்)
பேச பேச ஒரு மாயக் காற்றில் மிதந்தேன்
போக போக ஒரு சாரல் போல விழுந்தேன்

(பெண்)
மனம் முழுதும் நூறு கோடி அலை மோதும்
மழை ஆசை தீர கரைந்தேன்
உயிர் துணையை நானும் தேடி வர
நாளும் ஏங்கி நின்று இன்று உன்னை அடைந்தேன்

(ஆண்)
இதுவரையில் யாருமில்லை துணை
இனி இனிமேல் நீயும் நானும் இணை

(ஆண்)
நினைவுகளை வீசிப் பார்க்கும்
(பெண்)
இரு விழிகள் பேசித் தோற்கும் கலை

(பெண்)
மாயக் கனவோ மாறும் நினைவோ திகைத்தேன்
(ஆண்)
சேரும் நிலவோ மீறும் உறவோ திளைத்தேன்

(பெண்)
உனை நினைத்தே...
(ஆண்)
தீரா காதலோ...
இது யாரைச் சேர்த்த சொந்தம்
காலம் கோர்த்த பந்தம்

(பெண்)
மீளா தேடலோ...
இடைவெளி ஓடிப் போக
நெஞ்சம் பாவமாக கெஞ்சும்

(இருவரும்)
காதலான காட்சியாக தெரியுதே
ஆன போதும் கைகள் உள்ள...
நீயும் வேறு நானும் வேறு
சேர்ந்து போகப் பாதை நூறு
கோடி கோடி ஆவல் கூடி நிறையுது
தேடி தேடி தேகம் ரெண்டும் கரையுது
கூறிடாத வார்த்தைக் கூட்டில்
ஆசை மோதி

(பெண்)
உடைந்து விழ
காலம் தேடி வரும்
(ஆண்)
விரல் பிடிக்க நேரம் ஓடி வரும்
(பெண்)
தயக்கங்களும் நம்மை நீங்கிவிடும்
(ஆண்)
தடை எதுவும் நாளை மாறிவிடும்

(பெண்)
மாயக் கனவோ
(ஆண்)
மாறும் நினைவோ திகைத்தேன்
(பெண்)
சேரும் நிலவோ
(ஆண்)
மீறும் உறவோ திளைத்தேன்
(இருவரும்)
உனை நினைத்தே...

(பெண்)
மாயக் கனவோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nooru Saami

Keep listening

More from this movie

  1. Maaya Kanavo மாயக் கனவோ

    Sung by Chinmayi Sripada, Kapil Kapilan