Rasave Rasave Kathirunthen artwork

Song lyrics

Rasave Rasave Kathirunthen

ராசாவே ராசாவே காத்திருந்தேன்

2086 views

Singer · Uma Ramanan

Lyrics · Rajesh Kanna

The lyrics

ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த
வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த

தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே
உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே

பல நாளா உன்னத் தேடி பசியாற மறந்தேன்யா
கடுதாசி வருமோன்னு கண்ணுறங்க மறுக்குதய்யா
மனசுக்குள்ள நீயிருந்து மணிக் கணக்கா துடிக்கிறியே
மத்தவங்க பார்வைக்குத்தான் மனக் கணக்கா இருக்குறியே

தரையிலே விரிச்ச பாய மடிச்சு வைக்க மனசில்லையே
தலையிலே வச்சேன் மல்லி இருந்தும் அது சுகமில்லையே
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே

முகூர்த்தம் வச்சுத்தானே மணம் முடிச்சோம் ஒரு நாளு
முதலிரவு முடியும் முன்னே ஏன் நீரு போனீரு
கடமை அழைக்குதின்னு நீ பறந்து போனாயோ
உன் உடம்பு நிக்குதிங்கே அத மறந்து போனாயே

நெத்தியிலே வச்சப் பொட்டு நெஞ்சுக்குள்ளே நிக்குதய்யா
நீ மத்தியிலே தந்த முத்தம் மனசுக்குள்ள நிக்குதய்யா
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே

வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த
வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த
தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே
உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே

ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Namma Ooru Nayagan

Keep listening

More from this movie

  1. Kannamma Kannamma கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன்

    Sung by Rajkumar Bharathi

  2. Kaattu Poo Poothiduchu காட்டுப்பூ பூத்திடுச்சு

    Sung by Malasiya Vasudevan

  3. Therattam Nee Nadandha தேராட்டம் நீ நடந்தா

    Sung by Ramesh

  4. Rasave Rasave Kathirunthen ராசாவே ராசாவே காத்திருந்தேன்

    Sung by Uma Ramanan

  5. Vaa Vaa Vaa Vasanthame வா வா வா

    Sung by Mano, Uma Ramanan

  6. Vaadipatti Sandhaiyile வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன்

    Sung by T. K. S. Nadarajan, Chaya

  7. Jannalukku Pakkathila Chinna ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன

    Sung by Ramesh