Song lyrics
Kalamellam Kadhal
காலமெலாம் காதல் வாழ்க
43462 views
Singer · Unni Krishnan, Chithra
Lyrics · Vaali
The lyrics
காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி
(இசை)
கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் போகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் அது போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே
(காலமெலாம்)
ஜாதி இல்லை பேதமில்லை சீர்வரிசை தானோயில்லை காதல்
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யார் என்ன காதல் வந்து சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது காசு பணம் கேட்பதில்லையே
(காலமெல்லம்)

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Nalam Nalam நலம் நலமறிய ஆவல்
Sung by S. P. Balasubramanyam, Anuradha Sriram
-
Kalamellam Kadhal காலமெலாம் காதல் வாழ்க
Sung by Unni Krishnan, Chithra
-
Sivapu Lolaku சிவப்பு லோலாக்கு
Sung by S. P. Balasubramanyam
-
Mottu Malaratha Mottu மொட்டு மலராத மொட்டு
Sung by Swarnalatha
-
Vellarikka Pinchu வெள்ளரிக்காய் பிஞ்சு
Sung by Deva, Krishnaraj