Kaaviri Thaaye Kaaviri Thaaye artwork

Song lyrics

Kaaviri Thaaye Kaaviri Thaaye

தாயே காவிரித் தாயே

5738 views

Singer · K. Jamuna Rani

Lyrics · Kannadasan

The lyrics

தாயே .. காவிரித் தாயே ..
பொன்னிப் பெருந்தாயே
புகழ் வளர்த்த காவிரியே
தென்னவனைக் கொண்டு சேர்த்த இடம் கூறாயோ தாயே ..... காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே

ஆவியில் கலந்தவரை ஏன் பிரித்தாயோ?
ஆவியில் கலந்தவரை ஏன் பிரித்தாயோ?
அழகினிலே மயங்கி நீ மறைத்தாயோ?
காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
கரை புரண்தோடுகிறாய் மணமுருகாதோ?
என் கண்ணீரும் சேர்ந்து விட்டால் கரை உடையாதோ?
கைம்மையிலே என்னைக் கலங்க வைப்பாயோ?
கைம்மையிலே என்னைக் கலங்க வைப்பாயோ?
கருணை மனமிரங்கி வாழ வைப்பாயோ?
காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே

கள்வர்கள் கன்னமிட்டால் உன்னிடம் சொல்வோம்
காப்பவள் கன்னமிட்டால் யாரிடம் சொல்வோம்?
அங்கமெல்லாம் தளர்ந்து பதறுகின்றேனே
அங்கமெல்லாம் தளர்ந்து பதறுகின்றேனே
அன்பரைத் தந்து என்னை வாழ வைப்பாயே


மணி முடி தழைக்க வந்த மன்னவன் எங்கே?
மனையறம் காக்க வந்த மன்னவன் எங்கே?
கொள்கையிலே வளர்ந்த கொற்றவன் எங்கே?
எங்கே ..எங்கே .. எங்கே .. எங்கே .
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mannadhi Mannan

Keep listening

More from this movie

  1. Aadadha Manamum Undo ஆடாத மனமும் உண்டோ

    Sung by T. M. Soundararajan, M. L. Vasanthakumari

  2. Achcham Enbadhu Madamaiada அச்சம் என்பது மடமையடா

    Sung by M. L. Vasanthakumari, T. M. Soundararajan

  3. Kalaiyodu Kalandhadhu Unmai கலையோடு கலந்தது உண்மை

    Sung by M. L. Vasanthakumari

  4. Kangal Irandum Unnai கண்கள் இரண்டும்

    Sung by P. Susheela

  5. Kaniya Kaniya Mazhalai Pesum கனியக் கனிய மழலை

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  6. Neeyo Nano Yaar Nilave நீயோ நானோ யார் நிலவே

    Sung by K. Jamuna Rani, P. B. Srinivas, P. Susheela

  7. Kaaviri Thaaye Kaaviri Thaaye தாயே காவிரித் தாயே

    Sung by K. Jamuna Rani