Indha Mandrathil

Song lyrics

Indha Mandrathil

இந்த மன்றத்தில் ஓடிவரும்

19483 views

Singer · P. B. Srinivas, S. Janaki

Lyrics · Kannadasan

The lyrics

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

வண்ண மலர்களின் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
என்னும் வேதனை கூறாயோ

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்

தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
என் அதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Policekaran Magal

Keep listening

More from this movie

  1. Nilavukku En Mel நிலவுக்கு என்மேல்

    Sung by P. B. Srinivas

  2. Pon Enbean Siru பொன் என்பேன் சிறு

    Sung by P. B. Srinivas, S. Janaki

  3. Indha Mandrathil இந்த மன்றத்தில் ஓடிவரும்

    Sung by P. B. Srinivas, S. Janaki

  4. Porandhaalum பொறந்தாலும் ஆம்பிளையா

    Sung by Chandrababu

  5. Aandondru Ponal ஆண்டொன்று போனால்

    Sung by P. B. Srinivas, S. Janaki