Kavithayae Theriyuma artwork

Song lyrics

Kavithayae Theriyuma

கவிதையே தெரியுமா

101340 views

Singer · Harini, Manickka Vinayagam

Lyrics · Arivumathi

The lyrics

கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா?

குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே

மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே

ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே

வானம் காணாத வென்னிலவொன்று மோக பாலூட்டுதே

நாணம் பொய் நீட்டுதே ஹே

கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா?

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உயிரில் இறங்கி வரவா? உன் உடலில் கரைந்து விடவா?

உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா

புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா?

இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா?

வேர்வை குடை தேடவா… ஹா

கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே காதலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Jayam

Keep listening

More from this movie

  1. Kavithayae Theriyuma கவிதையே தெரியுமா

    Sung by Harini, Manickka Vinayagam

  2. Kodi Kodi Minnalgal கோடி கோடி மின்னல்கள்

    Sung by Vijay Yesudas

  3. Thiruvizhannu Vantha திருவிழான்னு வந்தா

    Sung by Tippu

  4. Kaathal Thandha Vali காதல் தந்த வலி

    Sung by Karthik

  5. Vandi Vandi Railu Vandi வண்டி வண்டி

    Sung by Manickka Vinayagam, Tippu

  6. Kanamoochi கண்ணாமூச்சி ரே ரே

    Sung by Shankar Mahadevan

  7. Kadhal inithidum Narakama காதல் இனித்திடும் நரகமா

    Sung by Karthik