Nalla Velai artwork

Song lyrics

Nalla Velai

நல்ல வேளை நான்

9712 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்

நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் ஒரு திருப்பம்
என்னை நம்பியிருந்தாள் அவள் நலம் அடைந்தாள்
என்றும் அது தானே என் விருப்பம்
எதிர் காலம் ஒன்று புது கோலம் கொண்டு
மனவாசல் தேடி வருமே

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்

கண் மேல் பிறந்து கை மேல் முடியும்
கதையில் என்ன தயக்கம்
மலர் கட்டில் அறையில் அன்று கிட்டும் வரையில்
சொல்லும் காவியத்தில் வரும் மயக்கம்
ஒரு பாதி அங்கும் மறு பாதி இங்கும்
சரி பாதி இங்கு வருமே

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்

மடி மேல் துயிலும் கொடி போல் துவளும்
பேரழகை படம் பிடித்தேன்
அந்த பட்டு முகத்தை இந்த சுட்டு விரலால்
தொட்டு பார்க்கையிலே உயிர் துடித்தேன்
காதல் போன்ற உள்ளம் கரை மீறி துள்ளும்
உடல் சேரும் எண்ணம் வருமே

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Naan Aanaiyittal

Keep listening

More from this movie

  1. Kodukka Kodukka கொடுக்க கொடுக்க இன்பம்

    Sung by M. S. Viswanathan, P. Susheela

  2. Naan Uyara நான் உயர உயரப் போகிறேன்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Nalla Velai நல்ல வேளை நான்

    Sung by T. M. Soundararajan

  4. Megangal Irundu (Odi Vanthu) ஓடி வந்து மீட்பதற்கு

    Sung by P. Susheela, Seerkazhi Govindarajan

  5. Pattu Varum பாட்டு வரும் என்ன

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  6. Pirandha Idam பிறந்த இடம் தேடி

    Sung by L. R. Eswari

  7. Thaaimel Aanai தாய் மேல் ஆணை

    Sung by T. M. Soundararajan