Vichithirame Manithan Charithirame artwork

Song lyrics

Vichithirame Manithan Charithirame

விசித்திரமே மனிதன்

2115 views

Singer · C. S. Jayaraman

Lyrics · Villiputhan

The lyrics

விசித்திரமே மனிதன் சரித்திரமே – இதன்
விளக்கமெல்லாம் மகா பயங்கரமே
பசிக்குணவு தரும் உலகம் பலவிதமே – மனிதன்
பகலிரவும் ஆடுகின்ற பம்பரமே.......

விசித்திரமே மனிதன் சரித்திரமே – இதை
விளக்கிவிட்டால் வரும் ஆத்திரமே – பொதுவில்
இயற்கையின் வளர்ச்சியெல்லாம் பொதுநலமே
அறிவு இருக்கிற மனிதனைப் பார் சுயநலமே அதனால் (விசித்திரமே)

சொந்த நாட்டைக் காணும் ஆசை கண்களிலே – தங்கை
சோக வாழ்வு காட்சி வேறு மனதினிலே
இந்த வேளை தவறு செய்த நண்பனாலே – சிறையில்
இருந்து தியாகம் செய்தவன் பார் கண் முன்னாலே பொதுவில் (விசித்திரமே)

பாம்புக்கு பாலூட்டி வளர்த்துவிட்டான் – மனித
பண்புக்குத் தலை வணங்கி அழுதுவிட்டான்
வெளுத்ததெல்லாம் பால் போல் நினைத்துக் கெட்டான் –கையில்
விளக்கிருந்தும் கிணற்றில் விழுந்துவிட்டான் பாவம் (விசித்திரமே)

அலையும் கடலில் ஒரு முத்தை எடுத்தான் – அதை
அடுத்தவர் சுகங் காண பறி கொடுத்தான்
மலை போல் துன்பமெல்லாம்தான் சுமந்தான் – பிறர்க்கு
மரம் தரும் நிழல் போல பிறந்துவிட்டான் - கொடுமை (விசித்திரமே)

கவலையில்லா மனிதன் உலகில் பிறந்ததில்லை
கவலை கசக்குதென்றால் வாழ்க்கைக் காட்சி ருசிப்பதில்லை
காய்க்கு முன்னே பழம் பழுத்த கதையுமில்லை
காலம் கொடுத்த உயிரை அழிக்க உனக்கு – உரிமையில்லை (விசித்திரமே)

.

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ellorum Vazhavendum

Keep listening

More from this movie

  1. Vichithirame Manithan Charithirame விசித்திரமே மனிதன்

    Sung by C. S. Jayaraman

  2. Van Mugathil வான் முகத்தில் வைர நிலா

    Sung by A. M. Rajah, Jikki

  3. Andhi Saayum Verlai அந்தி சாயும் வேளை

    Sung by Jikki

  4. Andhi Saayum Verlai என் அத்தான் வருவார்

    Sung by Jikki

  5. Aarambame Inikkum ஆரம்பமே இனிக்கும்

    Sung by C. S. Jayaraman, Mohana

  6. Vidiyum Varai Kathirupen விடியும் வரை காத்திருப்பேன்

    Sung by Seerkazhi Govindarajan

  7. Ponnu Ponnu Ponnu பொண்ணு பொண்ணு பொண்ணு

    Sung by S. Janaki