Un Viligalil Vilunthu artwork

Song lyrics

Un Viligalil Vilunthu

உன் விழிகளில் விழுந்து

79633 views

Singer · Harini

Lyrics · Na. Muthukumar

The lyrics

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்
உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன்
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்
ஓர் நொடியும் உன்னை நான் பிரிந்தால்
போர்க்களத்தை உணர்வேன் உயிரில்
என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே
( உன் விழிகளில் விழுந்து )

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே
நான் உனை பார்க்கிறேன் அன்பே
சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய்
உனக்கது தெரிந்ததா அன்பே
என் மனம் கானலின் நீர் என ஆகுமா
கைகளில் சேருமா அன்பே
நேசிக்கும் காலம் தான் வீனென போகுமா
நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே

பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே
பெண்களின் நெஞ்சம் தானடா
வண்ணத்து பூசியின் வண்ணங்கள் போலவே ஆண்களின்
நெஞ்சம் தானடா
வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும்
எண்ணங்கள் சேருமா அன்பே
வண்ணத்து பூசியின் சிறகுகள் மோதவே
இதழ்களும் உள்ளதே இங்கே
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே

( உன் விழிகளில் விழுந்து )
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Darling (2015)

Keep listening

More from this movie

  1. Vandha Mala Pona வந்தா மல போன முடி

    Sung by Gaana Bala, Karunas

  2. Unnale Kangal உன்னாலே கண்கள்

    Sung by Shankar Mahadevan, Shreya Ghoshal

  3. Sattena Idi Malai சட்டென இடி மழை

    Sung by Megha, G. V. Prakash Kumar

  4. Un Viligalil Vilunthu உன் விழிகளில் விழுந்து

    Sung by Harini

  5. Anbe Anbe அன்பே அன்பே

    Sung by G. V. Prakash Kumar