Ayya Veedu Song Lyrics

வீட்டுக்கு கதவிருக்கு பாடல் வரிகள்

Kadhalukku Mariyaathai (1997)
Movie Name
Kadhalukku Mariyaathai (1997) (காதலுக்கு மரியாதை)
Music
Ilaiyaraaja
Singers
Ilaiyaraaja
Lyrics
Palani Barathi
வீட்டுக்கு கதவிருக்கு கதவுக்கு பூட்டிருக்கு
வானத்த பூட்டி வைப்பதாரடா
அன்புக்கு மனசிருக்கு ஆசைக்கு அளவிருக்கு
கடலுக்கு அணை இங்கு ஏதடா
யாரிங்கு வந்தாலும் யாரெங்கு போனாலும்
கடல் நீறு கொறையாது போங்கடா
கரையோரம் உறவாட வாங்கடா

 அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஒருபோதும் கலங்காதே நாளைக்கு
ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு
நீயும் இங்கே நம்மாளு சோகம் என்ன
உன்னோடு கொண்டாடு

அய்யா வூடு  தொறந்து தான் கெடக்கு

உள்ளே புகுந்து  பந்தி போடு

முத்துக்கடலு  மூடியா கெடக்கு

முடிஞ்சா எடுத்து  மாலை போடு

ஹே புள்ளாண்டான் புள்ளாண்டான் காசோடு யாரிங்கு வாராண்டா
சொல்லேண்டா சொல்லேண்டா எதுக்கு காசெல்லாம் விட்டுபுட்டு போறான்டா

இருக்கும் வரைக்கும்  சூட்டு கோட்டு

ஹே அடிப்பான் பாரு  தாட்டு பூட்டு

அட பாட்டன் பூட்டன்  கதைய கேட்டு

போவன் பாரு  பழைய ரூட்டு

பூமி இது வாடக வீடு புரிஞ்சிக்கிட்டு குடித்தனம் பாரு
சத்தியத்த நெஞ்சில வச்சு சந்தோசமா சங்கதி போடு
கடலும் அலையும் சேர்ந்துதான் பாடும் எப்போதும் சந்தோசம் தான்

ஹே

அய்யா வூடு  ஹே ஹே ஹே ஹே

அய்யா வூடு  ஹே ஹே ஹே ஹே

அய்யா வூடு  தொறந்து தான் கெடக்கு

உள்ளே புகுந்து  பந்தி போடு

முத்துக்கடலு  மூடியா கெடக்கு

முடிஞ்சா எடுத்து  மாலை போடு

மண்மேலே மண்மேலே எல்லார்க்கும் சாப்பாடு யாராலே
தந்தானே தந்தானே நம்மோட சாப்பாடு மீன் மீனே

கடலில் ஆடும் அலையை பாத்தேன்
வெளிச்சம் கொடுக்கும் நிலவ பாத்தேன்
கேள்வி ஒன்னு நானும் கேட்டேன்
பதிலே இல்ல மலைச்சு போனேன்
கண்ணுக்கெட்டும் தூரம் தூரம் மனுஷன தான் காணோம் காணோம்
கலி முடியும் நேரம் நேரம் புது மனுஷன் வேணும் வேணும்
மனசும் மனசும் கலந்து தான் இருந்தா எப்போதும் கொண்டாட்டம் தான்

அய்யா வூடு  ஹே தகிட்ட தகிட்ட தகிட்ட தகிட்ட

அய்யா வூடு  இந்தா இந்தா இந்தா இந்தா

அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு

ஒருபோதும் கலங்காதே நாளைக்கு
ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு

நீயும் இங்கே நம்மாளு சோகம் என்ன
உன்னோடு கொண்டாடு

அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு