Kanmaniyae Kadhal Enbathu Song Lyrics

கண்மணியே காதல் என்பது பாடல் வரிகள்

Aarilirunthu Arubathu Varai (1979)
Movie Name
Aarilirunthu Arubathu Varai (1979) (ஆறிலிருந்து அறுபது வரை)
Music
Ilaiyaraaja
Singers
Lyrics
Panchu Arunachalam
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்


கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

பாலும் கசந்தது பஞ்சணை வந்தது காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்
நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ