Nalla Neram Song Lyrics

நல்ல நேரம் பாடல் வரிகள்

Uthama Raasa (1993)
Movie Name
Uthama Raasa (1993) (உத்தம ராசா)
Music
Ilaiyaraaja
Singers
S. P. Balasubrahmanyam
Lyrics
Vaali
நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி

அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு
தஞ்சாவூர் தேரபோல் ஆடு
எப்போதும் முப்போகம் பாரு
எல்லார்க்கும் உண்டியிங்கு சோறு

உழைச்சதுக்கு பலனிருக்கு
பலன் கொடுக்க நிலமிருக்கு
நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி

கட்டபொம்மன் வாரிசாக
கர்ஜிக்க வந்தவன் யாரு
கேட்டு பார் சொல்லிடும் ஊரு
முண்டாவ கட்டுற ஆள
மூட்ட கட்டி போட்டுடுவேன்
பண்போடு வாழுற பேர
பாட்டு கட்டி போற்றிடுவேன்

ஊருக்காக போர் தொடுப்பேன்
உத்தமன்னு பேர் எடுப்பேன்
அடுத்தவன கெடுத்ததில்ல
கெடுத்தவன பொறுத்ததில்ல

நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி

பெண் : உத்தமி பெத்த என் உத்தம ராசா
குழு : இவன் நித்தமும் வாழனும் முத்தமிழ் போல
பெண் : தங்க சத்திய வார்த்தையா காட்டுற ராசா
குழு : இவன் நித்தமும் சுத்துற சூரியன் போலே
குழு : இங்கு என்றும் உள்ள தென்றலை போல்
அண்ணன் இவன் வாழ்ந்திடனும்

என்ன நம்பி கெட்டவங்க
எங்கேயும் பார்ததுதில்லை
உள்ளத்தில் நான் ஒரு பிள்ளை
சிங்கார செந்தமிழ் பாட்டு
காலை மாலை நான் படிப்பேன்
என் பாட்டில் ஊராரின் நெஞ்ச
கொள்ளை கொண்டு நான் நடப்பேன்

நன்மை செஞ்சா கை கொடுப்பேன்
தீமை செஞ்சா கை கலப்பேன்
தர்மத்துக்கு கொடி புடிப்பேன்
அது ஜெய்க்க குரல் கொடுப்பேன்

நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி

அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு
தஞ்சாவூர் தேரபோல் ஆடு
எப்போதும் முப்போகம் பாரு
எல்லோர்க்கும் உண்டியிங்கு சோறு

உழைச்சதுக்கு பலனிருக்கு
பலன் கொடுக்க நிலமிருக்கு
நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி


Nalla neram edha thottalum ponnaguthu
Nenachapadi nadakkuthadi
Nalla yogam namma thoppellaam poovaguthu
Kilai kilaiyaai kulunguthadi

Adi santhosa paatu onnu paadu
Thanjavur therapol aadu
Eppothum muppogam paaru
Ellaarkkum unduingu sooru

Uzhaichathukku palanirukku
Palan kodukku nelamirukku
Nalla neram edha thottalum ponnaguthu
Nenachapadi nadakkuthadi

Kattabomman vaarisaaga
Kargikka vandhavan yaaru
Kettu paar sollidum ooru
Mundava kattura aala
Moota katti pottuduven
Panbodu vaazhura pera
Paatu katti potriduven

Oorukaaga por thoduppen
Uthamannu per eduppen
Aduthavana keduthathilla
Keduthavana poruthathilla

Nalla neram edha thottalum ponnaguthu
Nenachapadi nadakkuthadi

Female : Uthami petha en uthama raasa
Chorus : Ivan nithamum vaazhanum muthamil polae
Female : Thanga sathiya vaarthaiya kaattura raasa
Chorus : Ivan nithamum suthura sooriyan polae
Chorus : Ingu endrum ulla thendralai pol
Annan ivan vaazhnthidanum

Enna nambi kettavanga
Engeyum paarthathilla
Ullathil naan oru pillai
Singaara senthamil paatu
Kaalai maalai naan padippen
En paatil ooraarin nenja
Kollai kondu naan nadappen

Nanmai senja kai koduppen
Theemai senja kai kalappen
Tharmathukku kodi pudippen
Athu jeiyikka kural koduppen

Nalla neram edha thottalum ponnaguthu
Nenachapadi nadakkuthadi
Nalla yogam namma thoppellaam poovaguthu
Kilai kilaiyaai kulunguthadi

Adi santhosa paatu onnu paadu
Thanjavur therapol aadu
Eppothum muppogam paaru
Ellaarkkum unduingu sooru

Uzhaichathukku palanirukku
Palan kodukku nelamirukku
Nalla neram edha thottalum ponnaguthu
Nenachapadi nadakkuthadi