Senthamizhe Vanakkam Song Lyrics

செந்தமிழே வணக்கம் பாடல் வரிகள்

Nadodi Mannan 1958 (1958)
Movie Name
Nadodi Mannan 1958 (1958) (நாடோடி மன்னன்)
Music
S. M. Subbaiah Naidu
Singers
T. M. Soundararajan
Lyrics
N. S. Balakrishnan
செந்தமிழே வணக்கம் 
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்

செந்தமிழே வணக்கம் 
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்

செந்தமிழே வணக்கம்


ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே...
ஏ... ஏ... ஏ... ஏ... ஏ... ஏ...

ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும் 
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும் 

செந்தமிழே வணக்கம்

மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே 
மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே 
பெற்ற அன்னை தந்தை அன்றி
பெற்ற அன்னை தந்தை அன்றி மேலாய்
பிறிதொரு தெய்வம் இலை என்பதாலே

செந்தமிழே வணக்கம்

ஜாதி சமயங்கள் இல்லா...
ஆ... ஆ... ஆ... 

ஜாதி சமயங்கள் இல்லா நல்ல
சட்ட அமைப்பினைக் கொண்டே 
நீதி நெறி வழி கண்டாய் 
நீதி நெறி வழி கண்டாய் எங்கள்
நெஞ்சிலும் வாழ்விலும் ஒன்றாகி நின்றாய் 

செந்தமிழே வணக்கம்...