Maalai Onru Kaiyil Song Lyrics

மாலை ஒன்று கையில் பாடல் வரிகள்

Kathanayaki (1955) (1955)
Movie Name
Kathanayaki (1955) (1955) (கதாயாயகி)
Music
G. Ramanathan
Singers
Lyrics
Kannadasan

மாலை ஒன்று கையில் கொண்டு சுழற்றி
இம்மண்டபத்தில் நின்று வீசிடுவேன் அது வந்து
கழுத்தில் விழுந்தவரை மணவாளனாக
உடன் கூட்டிச் செல்வேன்..(மாலை)

கலையே உன் இதழ் காணும் முதல் பாடமா
இன்பக் கலையே உன் இதழ் காணும் முதல் பாடமா
காதல் கனியே உன் விழிக் கூட கவி பாடுமா
நிலவோடு விளையாடும் எழில் தாரையை
பிரிக்க நினைத்தாலும் எவராலும் நிறைவேறுமா (கலையே)

விலைமாதர் விழி மேவும் விஷம் யாவுமே
இன்ப நிலை காணும் அனுராக கலை கூடமா
இளங்காதல் மனம் நோகும் நிலையாகுமா
இருள் மேவும் என் வாழ்வில் ஒளி வீசுமா

கண்கண்ட தெய்வமே
காலமெல்லாம் என் வாழ்வினில்
ஆலையின் கரும்பாக அலைபடும் துரும்பாக
அமைதியில்லா வாழ்வில் ஒளி வீச வாரீர்
நான் கண்ட தெய்வமே....

கனிந்து வந்த என் கருணைக் கடலே
அமுது உண்ணவாரும் ஸ்வாமி
அமுது உண்ணவாரும்.....

கடன் கொடாமலே மாதவியின்
அமுதுண்ணேன் இதென் ஆணை
கண்ணகியே எந்தன் மானே.....

அடைக்கலமே அடைக்கலமே
அதிநய குணமுள்ள அருமை கண்ணகி உங்கள்
இடைகுலம் தன்னில் வந்த எங்களின் தாயே
இனி உனையல்லால் கெதி இல்லையறிவாயே...(அடைக்)

வாழ்வினிலே எனக்கேதேனும் துன்பம் வந்தால்
வைத்த அடையாளம் மாறிவிடும்
மாங்காய் அழுகிவிடும் மல்லிகை வாடிவிடும்
தேங்காய் உடைந்து விடும் திருவிளக்கு அணைந்துவிடும்

சிலம்போ......சிலம்பு,,,,,,,,
செந்தமிழ்ச் செல்வி ஊஞ்சலாடிடும்
சங்கப் பலகையிலே வளர் சங்கப் புலவர்களே
தன்மானம் உள்ள நல்ல வணிகர்களே
தர்மம் ஏதும் தவறா தனிகர்களே........(சங்கப்)

நல்ல காலம் வந்ததையா கூடவே வாங்க
சும்மா கூடவே வாங்க நம்பிக்கையா
கால் சிலம்பை எல்லா எங்கையிலே தாங்க
சொல்லி வச்ச மாதிரியா நீங்க விலையை போடுங்க ராஜா
சொன்ன சொல்லை கேட்பாரு கூடவே வாங்க - நான்
சொன்ன சொல்லை கேட்பாரு கூடவே வாங்க....

வாழ்க்கையின் தீபம் மறைந்ததே ஸ்வாமி
வாடாத மலரும் உலர்ந்ததே ஸ்வாமி
வளமான சோலையும் வற்றாத பொய்கையும்
நிலைமாறி போனதே நீதியும் மறைந்ததே ஸ்வாமி...

கொடுங்கோல் ஆட்சியில் உருவமான கொற்றவா
என் கணவர் குற்றமே புரிந்ததுண்டா....
கொலைப் பாதகம் செய்த பழிகாரப் பாண்டியா
இந்நாட்டில் குறையேதும் நேர்ந்ததுண்டா
ஆராய்ச்சி இல்லாத மன்னவா உன்னையே
அகம்பாவத்தால் மறந்தாய் அந்தோ என் சிலம்பதை பார்

அந்தணர் அறவோர் ஆவொடு மதனையும்
ஆன்றோர் சான்றோர் பத்தினி பெண்மார்
அன்பர்கள் வாழ அநீதியும் வீழ.....
வா.......வா.......அக்கினி தேவா..............!