Mooda Nambikkaiyaale artwork

Song lyrics

Mooda Nambikkaiyaale

மூட நம்பிக்கையாலே

2329 views

Singer · P. B. Srinivas

Lyrics · T. K. Sundara Vathiyar

The lyrics

மூட நம்பிக்கையாலே – பல
கேடு விளையும் மனிதா – இதை
ஆடுமாடு போலே அறியாமல் வாழலாமா
வெறும் மூட நம்பிக்கையாலே......

பெரும் மூடு பனியைப்போல – உனை
மூடி மறைக்கும் மடமை
அறிவோடு எதையும் நீயே
ஆராய வேணும் மனிதா......பகுத்தறிவோடு
ஆராய வேணும் மனிதா....

மலையோடு மோதி மோதி
கலைந்தோடும் மேகம் போலே
நிலையாத பொய்யை நம்பி
அலையாதே வீணில் மனிதா.....வெறும் (மூடநம்பிக்கை)

இருள் கண்டு பூதம் என்று
மருள்கின்ற மூட மனிதா
இருள் என்று கண்ட பின்னே
மருள்கின்ற பூதம் எங்கே.....

விதியென்று எண்ணி எண்ணி
மெலிவாகி நொந்திடாதே
எதிர் நின்று எதையும் வெல்லும்
மதி உண்டு பேதை மனிதா......வெறும் (மூடநம்பிக்கை)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Jathagam

Keep listening

More from this movie

  1. Eliyor Seiyum Izhivaana எளியோர் செய்யும்

  2. Maadugal Maeithidum Paiyan மாடுகள் மேய்த்திடும்

    Sung by M. S. Rajeswari

  3. Kulavum Yaazhisaiye குலவும் யாழிசையே கண்ணன்

    Sung by M. S. Rajeswari

  4. Manadhil Pudhuvidha மனதில் புதுவித இன்பம்

    Sung by M. S. Rajeswari

  5. Sindhanai En Selvame சிந்தனை ஏன் செல்வமே

    Sung by P. B. Srinivas

  6. Aandavan Namakku Alikkira ஆண்டவன் நமக்கு அளக்கற

    Sung by G. K. Venkatesh, A. G. Rathnamala

  7. Velan Varuvaanodi வேலன் வருவாரோடி

    Sung by M. L. Vasanthakumari

  8. Mooda Nambikkaiyaale மூட நம்பிக்கையாலே

    Sung by P. B. Srinivas