Aandavan Namakku Alikkira artwork

Song lyrics

Aandavan Namakku Alikkira

ஆண்டவன் நமக்கு அளக்கற

2005 views

Singer · G. K. Venkatesh, A. G. Rathnamala

Lyrics · T. K. Sundara Vathiyar

The lyrics

ஆண்டவன் நமக்கு அளக்கற
அளவுக்கு மேலே எதுவும்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
வேண்டவே வேண்டாம்

அவன் அளக்கற அளவுக்கும்
ஆசைக்கும் வெகுதூரம்......ஒரு
அம்பதறவதாயிரம்
ஆஸ்தி இருந்தா போதும்

(அடச்சே...போ என்னடி கொஞ்சமா கேக்கற)
(ஆமாமா ரொம்பத்தான் குடுத்துட்டாப்புல பாக்கறே..)

ஆஸ்தி அதிகம் இருந்தா நமக்கு
அசந்து வருமா தூக்கம்
அவங் கொடுக்கணும் இவங் கொடுக்கணும்
ஆஹா என்கிற ஏக்கம்......நமக்கு
வேண்டவே வேண்டவே வேண்டாமே.....(ஆண்டவன்)

பணமுள்ளவன் தெய்வமின்னு
பணியிது இந்தப் பூமி
பணத்தோட பெருமை தெரிஞ்சா
பதிலு சொல்ல மாட்டே சாமி
வேணுமே வேணுமே வேணுமே-சொத்துப் பத்து
வேணுமே வேணுமே வேணுமே---

பணக்காரங்க படுகிற தொல்லே
பார்த்தா தெரியாது வெளியே பார்த்தா தெரியாது
பலவித வரிகளும் செலுத்தணும் அதுக்கு
பதில் சொல்ல முடியாது

பகைகளும் வந்து சேரும்
மனசிலே பயமே ஒழியாது
பணந்தராவிடில் இவன் லோபியென்கிற
பட்டம் தவறாது...நமக்கு பட்டம் தவறாது

துட்டுக்காரனே கெட்டிக்காரன் அவன்
சொல்லுக்கு எதிரில்லே
துரைத்தனம் பேசிட அழைப்புகள் அங்கே
குவியும் கணக்கில்லே

துட்டுள்ளவன் சுகவாசி அவனுக்கு
துன்பம் ஏதுமில்லே – கையில்
துட்டில்லாமே குடும்பம் நடத்தறது
பெண்களுக்குத் தொல்லே...வீட்டிலே
பெண்களுக்குத் தொல்லே...

அதனால் வேணுமே வேணுமே வேணுமே
சொத்துப் பத்து வேணுமே வேணுமே வேணுமே...!

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Jathagam

Keep listening

More from this movie

  1. Eliyor Seiyum Izhivaana எளியோர் செய்யும்

  2. Maadugal Maeithidum Paiyan மாடுகள் மேய்த்திடும்

    Sung by M. S. Rajeswari

  3. Kulavum Yaazhisaiye குலவும் யாழிசையே கண்ணன்

    Sung by M. S. Rajeswari

  4. Manadhil Pudhuvidha மனதில் புதுவித இன்பம்

    Sung by M. S. Rajeswari

  5. Sindhanai En Selvame சிந்தனை ஏன் செல்வமே

    Sung by P. B. Srinivas

  6. Aandavan Namakku Alikkira ஆண்டவன் நமக்கு அளக்கற

    Sung by G. K. Venkatesh, A. G. Rathnamala

  7. Velan Varuvaanodi வேலன் வருவாரோடி

    Sung by M. L. Vasanthakumari

  8. Mooda Nambikkaiyaale மூட நம்பிக்கையாலே

    Sung by P. B. Srinivas