Song lyrics
Velan Varuvaanodi
வேலன் வருவாரோடி
2562 views
Singer · M. L. Vasanthakumari
Lyrics · T. K. Sundara Vathiyar
The lyrics
வேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வள்ளி மேல் மோகங் கொண்டு
வேடனான வடிவேலன் வருவாரோடி...
மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
தேனாகப் பேசி மையலானேன் என்ற
வடிவேலன் வருவாரோடி...
மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து
வேங்கை மரமாகி ஓங்கி வளர்ந்த
வடிவேலன் வருவாரோடி...
பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
அமுது உண்டோடி என்றோதி மன்றாடி நின்ற
வடிவேலன் வருவாரோடி...
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
கூனல் நிமிர்ந்து கொண்டு குலவி மகிழ்ந்த
வடிவேலன் வருவாரோடி...
யானை மருட்டி தினைக் கானில் விரட்ட
மட மானை மகிழ்ச்சியோடு மார்போடணைத்த
வடிவேலன் வருவாரோடி...
வள்ளி மேல் மோகங் கொண்டு
வேடனான வடிவேலன் வருவாரோடி...
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Eliyor Seiyum Izhivaana எளியோர் செய்யும்
-
Maadugal Maeithidum Paiyan மாடுகள் மேய்த்திடும்
Sung by M. S. Rajeswari
-
Kulavum Yaazhisaiye குலவும் யாழிசையே கண்ணன்
Sung by M. S. Rajeswari
-
Manadhil Pudhuvidha மனதில் புதுவித இன்பம்
Sung by M. S. Rajeswari
-
Sindhanai En Selvame சிந்தனை ஏன் செல்வமே
Sung by P. B. Srinivas
-
Aandavan Namakku Alikkira ஆண்டவன் நமக்கு அளக்கற
Sung by G. K. Venkatesh, A. G. Rathnamala
-
Velan Varuvaanodi வேலன் வருவாரோடி
Sung by M. L. Vasanthakumari
-
Mooda Nambikkaiyaale மூட நம்பிக்கையாலே
Sung by P. B. Srinivas