Song lyrics
Eatho Oru Ragam
ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
2565 views
Singer · P. Jayachandran, P. Susheela
Lyrics · Vairamuthu
The lyrics
ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது
உன் பாடல் என்னை வென்றது
உயிரோடு உள்ளம் சென்றது
காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி
வாராயோ எந்தன் தேவி
ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
ஆஆஆஆ.....ஆஆஆஆ...ஆஆஆஆ..
கண்ணா என் மேல் பிழையே இல்லை
சிறையை முறிக்க சிறகில்லை
கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை
வெளிச்சம் இருந்தும் பகலில்லை
அடைந்தேன் உன்னை இதுவே போதும்
இனியுன் ராகம் இவளின் வேதம்
ஏழை கேளாத பூபாளம் இன்று கேட்கின்றதோ
பாலைவனமெங்கும் பாலோடை வந்து பாய்கின்றதோ
கனவா நனவா நீதானா நீயேதானா
ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
உன்னை எண்ணி பாடும்போது
நெருப்பை சுடும் என் பெருமூச்சு
கண்ணா உன்னை கண்ணால் கண்டேன்
சருகோ மீண்டும் தளிராச்சு
இதயம் எங்கும் இன்பம் கொள்ளை
இனி என் வாழ்வில் இரவே இல்லை
கடலிலே சேர்ந்த
ஆறொன்று மீண்டு வருகின்றது
சொன்ன சொல் இன்று மாறாமல்
தீண்ட வருகின்றது
துயரை எரித்தேன் என் வாழ்வில் சோகம் ஏது
ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்
சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது
உன் பாடல் என்னை வென்றது
உயிரோடு உள்ளம் சென்றது
காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி
ஓடோடி வந்தாள் தேவி
ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்....
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Isaiyin Mazhaiyile இசையின் மழையிலே
Sung by K. J. Yesudas, Vani Jayaram
-
Eatho Oru Ragam ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
Sung by P. Jayachandran, P. Susheela
-
Saarayatha Podu Podu சாரயத்த போடு போடு
Sung by Malaysia Vasudevan
-
Naan Nenjukkulle Unna நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
Sung by Malaysia Vasudevan
-
Ragangal Ondru Serum ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள்
Sung by Vani Jayaram
-
Vizhi Deepam Unai விழி தீபம் உனைத் தேடும்
Sung by P. Susheela, S. P. Balasubramaniam