Odum Maegangalae artwork

Song lyrics

Odum Maegangalae

ஓடும் மேகங்களே

7406 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ

ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ

ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ

{ நாடாளும் வண்ண
மயில் காவியத்தில் நான்
தலைவன் நாட்டிலுள்ள
அடிமைகளில் ஆயிரத்தில்
நான் ஒருவன் } (2)

மாளிகையே
அவள் வீடு மரக்கிளையில்
என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
{ ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ } (2)

{ ஊரெல்லாம்
தூங்கையிலே
விழித்திருக்கும் என்
இரவு உலகமெல்லாம்
சிரிக்கையிலே அழுதிருக்கும்
அந்த நிலவு } (2)

பாதையிலே
வெகு தூரம் பயணம்
போகின்ற நேரம் காதலை
யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சை
நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aayirathil Oruvan

Keep listening

More from this movie

  1. Atho Antha Paravai Pola அதோ அந்த பறவை போல

    Sung by T. M. Soundararajan

  2. Naanamo Innum Naanamo நாணமோ இன்னும் நாணமோ

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Odum Maegangalae ஓடும் மேகங்களே

    Sung by T. M. Soundararajan

  4. Paruvam Enathu Paadal பருவம் எனது பாடல் பார்வை

    Sung by P. Susheela

  5. Unnai Naan Santhithaen உன்னை நான் சந்தித்தேன்

    Sung by P. Susheela

  6. Yaen Endra Kaelvi ஏன் என்ற கேள்வி இங்கு

    Sung by T. M. Soundararajan