Yaen Endra Kaelvi artwork

Song lyrics

Yaen Endra Kaelvi

ஏன் என்ற கேள்வி இங்கு

6258 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

[ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை ] (2)

[பகுத்தறிவு
பிறந்ததெல்லாம்
கேள்விகள்
கேட்டதனாலே ] (2)

[உரிமைகளை
பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள்
உள்ளதனாலே] (2)

ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை


[ஓராயிரம்
ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின்
பொருள் மட்டும்
விளங்கட்டுமே ] (2)

வருங்காலத்திலே
நம் பரம்பரைகள் நாம்
அடிமை இல்லை என்று
முழங்கட்டுமே

ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை

[நீரோடைகள்
கோடையில் காய்ந்திருக்கும்
மழைகாலத்தில் வெள்ளங்கள்
பாய்ந்திருக்கும்] (2)

நம் தோள்
வலியால் அந்த நாள்
வரலாம் அன்று ஏழை
எளியவர்கள் நலம்
பெறலாம்

முன்னேற்றம்
என்பதெல்லாம் உழைப்பவர்
உழைப்பதனாலே

கடமைகளை
புரிவதெல்லாம் விடுதலை
வேண்டுவதாலே

[ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை] (2)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aayirathil Oruvan

Keep listening

More from this movie

  1. Atho Antha Paravai Pola அதோ அந்த பறவை போல

    Sung by T. M. Soundararajan

  2. Naanamo Innum Naanamo நாணமோ இன்னும் நாணமோ

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Odum Maegangalae ஓடும் மேகங்களே

    Sung by T. M. Soundararajan

  4. Paruvam Enathu Paadal பருவம் எனது பாடல் பார்வை

    Sung by P. Susheela

  5. Unnai Naan Santhithaen உன்னை நான் சந்தித்தேன்

    Sung by P. Susheela

  6. Yaen Endra Kaelvi ஏன் என்ற கேள்வி இங்கு

    Sung by T. M. Soundararajan