Piriyatha Enna artwork

Song lyrics

Piriyatha Enna

பிரியாத என்ன எப்போதும் நீதான்

56364 views

Singer · Niranjana, Vijay Yesudas

Lyrics · Ku. Karthik

The lyrics

பெண் : ஏதேதோ ஆசை நெஞ்சுல
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல

ஆண் : ஒலகமே நமக்குத்தான்
நீ கூட இருந்துட்டா
சொர்க்கமே தொறக்குதா
உன் கூட நடந்துட்டா

பெண் : உசுரெல்லாம் இனிக்குதா
உன் தோளில் சாஞ்சிட்டா
சிறகுதா முளைக்குதா
உன் கைய பிடிச்சிட்டா

ஆண் : ஒரு வார்த்தைக்கூட
இங்கு சொல்ல தேவை இல்ல
காதல் இதுதான்

பெண் : பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

ஆண் : பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

ஆண் : கையால நானும்
மேகத்த தட்டுறவன்
நீ மட்டும் பார்த்த….
கை கட்டி நிக்குறவன்

பெண் : என் பேர நானும்
எப்போதும் சொன்னது இல்ல
உன் பேர சேர்த்து
சொல்லாத நாளும் இல்ல

ஆண் : ஈரேழு ஜென்மம் தாண்டி
ஒன்ன தோளில் தாங்கனும்
பெண் : தள்ளாடும் போதும்
கண்ணு ரெண்டும் ஒன்ன தேடனும்

ஆண் : உயிர் விட்டு போகும்
அந்த நொடியில் உன் உருவம்
முன்னாள் வரணும்

பெண் : பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

இருவர் : பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

ஆண் : ஏதேதோ ஆசை நெஞ்சுல
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல
எதுக்குன்னு புரியல
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pattas

Keep listening

More from this movie

  1. Chill Bro ஜில் ப்ரோ

    Sung by Dhanush

  2. Jigidi Killaadi ஜிகிடி கில்லாடி

    Sung by Anirudh Ravichander

  3. Mavane மவனே என்ன மோதிட

    Sung by Arivu, Vivek Siva, Mervin Solomon

  4. Morattu Thamizhan Da முறட்டு தமிழன்டா

    Sung by Mervin Solomon, Vivek Siva

  5. Piriyatha Enna பிரியாத என்ன எப்போதும் நீதான்

    Sung by Niranjana, Vijay Yesudas

  6. Pudhu Suriyan புது சூரியன் என் வீட்டிலே

    Sung by Anuradha Sriram