Kadavul Thantha artwork

Song lyrics

Kadavul Thantha

கடவுள் தந்த இரு மலர்கள்

10670 views

Singer · L. R. Eswari, P. Susheela

Lyrics · Vaali

The lyrics

கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே 

கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே 

காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன 
மலர் 
காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன 
மலர் 
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு 
போனதம்மா 
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு 
போனதம்மா 
பாவை கூந்தல் சேர்ந்த மலர் பருவம் கண்டு பூத்த 
மலர் 
பாசம் கொண்டு வந்ததம்மா பரிசாய்த் தன்னைத் 
தந்ததம்மா 

கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே 

அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு 
அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு 
தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான் 
தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான் 
குழலில் சூடிய ஒரு மலரும் கோயில் சேர்ந்த ஒரு 
மலரும் 
இரண்டும் வாழ்வில் பெருமை பெரும் இதயம் எங்கும் அமைதி பெரும் 

கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் 
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Iru Malargal

Keep listening

More from this movie

  1. Annamita Kaigaluku அன்னமிட்ட கைகளுக்கு

    Sung by P. Susheela

  2. Maharaja Oru Maharani மகராஜா ஒரு

    Sung by Sadan, Shoba, T. M. Soundararajan

  3. Mathavi Pon Mayilaal மாதவிப்பொன் மயிலாள்

    Sung by T. M. Soundararajan

  4. Mannikka Vendugiren மன்னிக்க வேண்டுகிறேன்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Kadavul Thantha கடவுள் தந்த இரு மலர்கள்

    Sung by L. R. Eswari, P. Susheela

  6. Velli Mani வெள்ளி மணி ஓசையிலே

    Sung by P. Susheela