Mathavi Pon Mayilaal artwork

Song lyrics

Mathavi Pon Mayilaal

மாதவிப்பொன் மயிலாள்

15003 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா
காதல் மழை பொழியும் கார் முகிலா
காதலன் நான் இருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட

நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா
இவள் காதலன் நான் இருக்க பேரெழிலாய்
இங்கே மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

க ரி ச நி த ப ம க ரி ச ரி க ம ப த நி
மாதவிப்பொன் மயிலாள்
க ரி ச நி த நி ப த நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மாதவிப்பொன் மயிலாள்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
மாதவிப்பொன் மயிலாள்
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத தகதீம் த க ஜனூ
தகிட தக திமி த நித ஜுனுத தாம்
கிர தகிட தாம் த க ஜுனுத
ததீம் தாஜும்ம்
ப நி த தக ஜனுத ஜும்ம் ஜும்ம்
பத நி நி பத நி தீம் ஹ்டரிகுகும் தகிட
ததரி ரி ஜ தஜம் தனும்
ச ரி க நி த நீத நி ச ரி நி த ப ம த ப
ச ரி க நி நி சா
ததிகினதொம் ததிகினதிம் தெம்ம் கினதோம்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Iru Malargal

Keep listening

More from this movie

  1. Annamita Kaigaluku அன்னமிட்ட கைகளுக்கு

    Sung by P. Susheela

  2. Maharaja Oru Maharani மகராஜா ஒரு

    Sung by Sadan, Shoba, T. M. Soundararajan

  3. Mathavi Pon Mayilaal மாதவிப்பொன் மயிலாள்

    Sung by T. M. Soundararajan

  4. Mannikka Vendugiren மன்னிக்க வேண்டுகிறேன்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Kadavul Thantha கடவுள் தந்த இரு மலர்கள்

    Sung by L. R. Eswari, P. Susheela

  6. Velli Mani வெள்ளி மணி ஓசையிலே

    Sung by P. Susheela