Mayakkamenna

Song lyrics

Mayakkamenna

மயக்கமென்ன

289 views

Singer · T. M. Soundararajan, P. Susheela

Lyrics · Kannadasan

The lyrics

ஆண் : மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
ஆண் : மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
ஆண் : தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே

பெண் : கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
பெண் : என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

ஆண் : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பெண் : பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
ஆண் : கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
பெண் : கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட

ஆண் : மயக்கமென்ன
பெண் : ம்ம் ஹ்ம்ம்...
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஹா...
ஆண் : மணி மாளிகை தான் கண்ணே

ஆண் : பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
பெண் : ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
ஆண் : மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
பெண் : வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட

ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா...
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ...
ஆண் : மணி மாளிகை தான் கண்ணே

ஆண் : அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விட மாட்டேன்
ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன்

ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா...
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ...
ஆண் : மணி மாளிகை தான் கண்ணே

பெண் : ஆஆஆ...
ஆண் : தயக்கமென்ன
பெண் : ஆஹாஹா...
ஆண் : இந்த சலனமென்ன
பெண் : ஆஹாஹா...
ஆண் : அன்பு காணிக்கை தான் கண்ணே
ஆண் : அன்பு காணிக்கை தான் கண்ணே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vasantha Maligai

Keep listening

More from this movie

  1. Kudimagane குடிமகனே

    Sung by T. M. Soundararajan, L. R. Eswari

  2. Mayakkamenna மயக்கமென்ன

    Sung by T. M. Soundararajan, P. Susheela

  3. Yaarukkaga யாருக்காக

    Sung by T. M. Soundararajan

  4. Irandu Manam Vendum இரண்டு மனம் வேண்டும்

    Sung by T. M. Soundararajan

  5. Oru Kinnathai ஒரு கிண்ணத்தை

    Sung by T. M. Soundararajan, L. R. Eswari, B. Vasantha

  6. Adiyenna Nottam அடியென்ன நோட்டம்

    Sung by T. M. Soundararajan, P. Susheela

  7. Kalaimagal Kaipidi கலைமகள் கைபிடி

    Sung by P. Susheela

  8. O Maanida Jaathiye ஓ மானிட ஜாதியே

    Sung by T. M. Soundararajan